தலைக்கு குறிவைத்த குண்டுகள்... குவிக்கப்பட்ட கட்டைகள்! - ‘ஸ்டெர்லைட்’ சந்தேகங்கள் | Activist Mugilan release video about Thoothukudi firing incident - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

தலைக்கு குறிவைத்த குண்டுகள்... குவிக்கப்பட்ட கட்டைகள்! - ‘ஸ்டெர்லைட்’ சந்தேகங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தின்போது,  நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தலையைக் குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இறந்தவர்களின் நெற்றிப்பொட்டு மற்றும் நெற்றியின் பக்கவாட்டில்தான் குண்டுகள் பாய்ந்துள்ளன என்றும் உடல்கூறாய்வை அடிப்படையாக வைத்துச் சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை சென்னையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாளன்று (2018, மே. 22) நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக அரசு வெளியிட்ட சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் நேரடி பதிவுகளைத் தொகுத்து, ‘ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீவைப்புச் சம்பவம், ஸ்டெர்லைட் நிறுவனம் ஏவிய அடியாட்களினால் காவல்துறையின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டது’ என்று குற்றச்சாட்டினார், முகிலன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close