அமைச்சரின் மகனுக்காக ஓர் அரசாணை! - வேளாண்துறையில் விதிமீறல் | Scam in TN Agriculture Department - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

அமைச்சரின் மகனுக்காக ஓர் அரசாணை! - வேளாண்துறையில் விதிமீறல்

தேரை ஏற்றிக் கன்றுக்குட்டியைக் கொன்ற இளவரசனைத் தன் மகன் என்றும் பாராமல், அதே தண்டனையைத் தந்த மனுநீதிச் சோழன் வாழ்ந்த மண்ணில்தான், தன் மகனுக்குப் பதவி உயர்வு தரவேண்டும் என்பதற்காக, பலரது வேலைவாய்ப்புகளைக் காவு கொடுத்துள்ளார் ஓர் அமைச்சர்.

தமிழக வேளாண் துறை அமைச்சரான துரைக்கண்ணுதான், அந்த அமைச்சர். அதே வேளாண் துறையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மகனான சிவவீரபாண்டியன், வேளாண் அலுவலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 29-ம் தேதி, தமிழக வேளாண் துறை வெளியிட்ட ஓர் அரசாணையின் படி (எண்: 24), வேளாண் உதவி இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார், சிவ வீரபாண்டியன். இவர் மட்டுமல்ல, இவருடன் சேர்த்து 177 பேருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுப் பட்டியலில், 138-வது பெயராக இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

எந்த ஓர் அரசுத்துறையாக இருந்தாலும், அந்தத் துறையின் புதிய பணியிடங்களுக்கு நியமனம் செய்யும் போதும் காலியிடங்களை நிரப்பும்போதும், மொத்தப் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நிரப்ப வேண்டும். வேளாண் துறையில் மட்டும், இது ஐந்தில் ஒரு பங்கு எடுத்தால் போதுமென்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படிப் பார்த்தாலும், தமிழகத்தில் மொத்தமுள்ள வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்களில் 64 பேரை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பியிருக்க வேண்டும். அப்படி நிரப்பினால், இந்த 177 பேர் பதவி உயர்வுப் பட்டியலில், அமைச்சரின் மகன் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், உள் விவரம் அறிந்த வேளாண் துறை அலுவலர்கள்.

[X] Close

[X] Close