IAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை! | Ministers atrocities in IAS, IPS officers transfer - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

IAS - டிரான்ஸ்ஃபரோ டிரான்ஸ்ஃபர்... அமைச்சர்கள் காட்டில் அடைமழை!

- அமலா

ண்டுக்கணக்கில் ஒரே பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அமைச்சர்கள் பற்றி, ‘கனவாகும் கலெக்டர் பதவி... அனலாகும் ஐ.ஏ.எஸ்-கள்’ என்ற தலைப்பில் ஜூ.வி 27.01.2019 தேதியிட்ட இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கட்டாயத்தின் பேரில் தற்போது மாற்றியுள்ளது, தமிழக அரசு.

முதற்கட்டமாக, கடந்த 16-ம் தேதியன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 25 பேர் இடம் மாற்றப்பட, ‘ஒட்டுமொத்த டிரான்ஸ்ஃபரிலும் அமைச்சர்கள் புகுந்து விளையாடியுள்ளனர். தங்களுக்குத் தோதான அதிகாரிகளை ஏற்கெனவே பணியாற்றும் இடத்திலிருந்து மாற்றுவது போல மாற்றி, அதே துறையிலேயே வேறு ஒரு முக்கியமான பதவியில் நியமித்துள்ளனர். இதன் மூலமாகச் சம்பந்தப்பட்ட துறைகளில் தொடர்ந்து, தங்களுடைய அதிகாரத்தை இஷ்டம்போல செலுத்துவது மட்டும்தான் அவர்களது நோக்கம்’’ என்கிற பொருமல் கேட்கிறது ஐ.ஏ.எஸ் வட்டாரங்களில்!

சென்னை மாநகராட்சி ஆணையராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவந்தார், கார்த்திகேயன். தற்போது, அவர் உள்ளாட்சித் துறையின் கீழ்வரும் நகராட்சி நிர்வாகங்களின் ஆணையர் எனும் முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோவை கலெக்டர் பதவியில் தொடர்ந்து நீடித்துவந்த ஹரிஹரன், தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சிறப்புச் செயலர் என்ற புதுப்பதவி உருவாக்கப்பட்டு, அதில் அமர வைக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்தி கேயனுக்காக, கோவை நகரியியல் பயிற்சி மையத்தில் புதிய பணியிடமே உருவாக்கப் பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close