மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி உள்ளே... ரஜினி வெளியே... - தேர்தல் மங்காத்தா

மிக ஸ்டைலாக வந்தமர்ந்த கழுகார், “விறுவிறுவென்று கேள்விகளைக் கேளும். கூட்டணி கலாட்டாக்களைக் கவனித்து மாளவில்லை. இன்னும் நிறைய இடங்களுக்குப் பறக்க வேண்டியிருக்கிறது” என்று பரபரத்தார்.

“நீர் படுவேகமாகத்தான் இருக்கிறீர். ஆனால், கூட்டணி விவகாரங்கள் இழுபடுகின்றனவே!’’ என்றோம்.

‘‘அ.தி.மு.க கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இருக்கும் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் கடைசி நேரத்தில் த.மா.கா வரலாம். ஆனால், இது, இரண்டு அணிகள் கொண்ட கூட்டணியாகவே இருக்கும் என்கிறார்கள். அ.தி.மு.க தலைமையில் ஓர் அணி, பி.ஜே.பி தலைமையில் மற்றோர் அணி.”

“தொகுதிப் பங்கீடு எப்படியோ?”

“இரண்டு அணிகளுக்கும் தனித்தனியாக ‘சீட் ஷேரிங்’ இருக்குமாம். ஆனால், யாருக்கு, எத்தனை சீட் என்பது பியூஸ் கோயல் வந்துசென்ற பிறகும் இழுத்துக்கொண்டே போகிறது. அநேகமாக, அமித்ஷாவே நேரடியாக வந்து அறிவிக்கக்கூடும் என்கிறார்கள். இந்த இதழ் கடைகளுக்கு செல்வதற் குள்ளாகக்கூட அவர் வந்து இறங்கியிருக்கக்கூடும்.”

“அமித்ஷாவே வருகிறாரா?”

“ஆமாம். அ.தி.மு.க-வுக்கு 25 சீட், பி.ஜே.பி-க்கு 15. இந்த 15 சீட்டில்தான் பா.ம.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்குத் தரவேண்டுமென்பது அ.தி.மு.க போடும் கண்டிஷன். ஆனால், ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதுபோல, அமித்ஷாவே வந்தால், அ.தி.மு.க தரப்பிலிருந்து இன்னும் இறங்கி வருவார்கள். கூடுதலாக சீட்களைக் கேட்டுப்பெற்றுப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்பதுதான் ஐடியா.’’

‘‘இந்தக் கூட்டணிக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி திடீர் வாய்ஸ் கொடுத்திருக்கிறாரே?’’

‘‘வாய்ஸ் மட்டுமல்ல, டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடவும் தீர்மானித்துள்ளார். தன்னுடைய ஜனதா கட்சியை பி.ஜே.பி-யுடன் இணைத்துவிட்டாலும், மீண்டும் அந்தக் கட்சிக்கு உயிர் ஊட்டுவதோடு, ஏற்கெனவே இருந்த ஏர் உழவன் சின்னத்தையும் பெற்று, போட்டியில் குதிப்பாராம். பி.ஜே.பி மேலிடத் தலைவர்களிடம், ‘தினகரன் தலைமையில் செயல்படும் கட்சிதான், உண்மையான அ.தி.மு.க. அவர்களுடன் கூட்டணி வைப்பதுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்று சுவாமி சொல்லியிருக்கிறார். ஆனால், அதை மேலிடத் தலைவர்கள் கேட்காததால்தான், எதிர்க் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close