சுல்தான் பதவிக்கு இளவரசி! - இந்தோனேஷிய அரச குடும்பத்தில் புயல் | Woman nominated for Sultan of Yogyakarta Indonesia - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

சுல்தான் பதவிக்கு இளவரசி! - இந்தோனேஷிய அரச குடும்பத்தில் புயல்

ந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ளது, யோக்யகர்தா நகரம். சுமார் நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நகரில், இன்றைக்கும் மன்னராட்சி நடைபெற்றுவருகிறது. இதன் அரசராக 10-வது ஹமெங்குபுவோனோ இருந்துவருகிறார். இவர், தனது சுல்தான் பதவியைத் தனக்குப் பிறகு தன் மூத்த மகளுக்கு அளிக்கும் முடிவை எடுத்துள்ளார். அது, அரச குடும்பத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக, உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டின் சுல்தான் பதவிக்கு, ஒரு பெண்ணின் பெயர் முன்மொழியப்பட்டதே புயலுக்குக் காரணம். காலங்காலமாக ஆண்கள் வீற்றிருந்த சிம்மாசனத்தை அலங்கரிக்கக் காத்திருக்கிறார், இளவரசி மங்குபூமி. இதை உறுதிசெய்யும் வகையில், சுல்தானின் அரச வாரிசுகளுக்குச் சூட்டப்படும் ‘கஸ்தி கன்ஜெங் ரட்டு’ என்ற பெயரை, தன் மகளுக்குப் புதிதாகச் சூட்டியுள்ளார். மன்னர். ஏற்கெனவே, ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் கலீஃபா (கடவுளின் சேவகன்) என்ற அரச பட்டத்தையும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும்விதமாக ரத்துசெய்துவிட்டார், தீவின் மன்னரான ஹமெங்குபுவோனோ.

ஜாவா தீவுகளில் அரசாட்சி என்பது 16-ம் நூற்றாண்டு காலம்தொட்டே இருந்துவருகிறது. அவர்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக இருந்தாலும் அவர்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் இந்து, புத்த சமயங்களைச் சார்ந்துதான் இருந்துவருகின்றன. நாடு விடுதலை அடைந்த பிறகு இந்தோனேஷிய அரசு, யோக்யகர்தா அரச குடும்பத்தின் அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறிக்கவோ, குறைக்கவோ இல்லை. நாட்டின் விடுதலைக்காக அவர் குடும்பம் பாடுபட்டதால், அதன் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றுவரை மக்கள் தங்கள் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை அங்கு வழக்கத்தில் இல்லை. 2010-ல், இந்த முறையை மாற்ற முயற்சி செய்தபோது, மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதுவரை ஆண்கள்தான் சுல்தான் பதவியை வகித்துவந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close