“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது!” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’ | BJP National Secretary H.Raja interivew - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

“கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தான்... அதில் அ.தி.முக வராது!” - ஹெச்.ராஜா ‘லாஜிக்’

ன்ன கேள்வி கேட்டாலும் எகிறி அடிப்பதுபோல் பதில் தரக்கூடியவர், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா. தமிழக பி.ஜே.பி-யைப் பரபரப்புடன் வைத்திருக்கும் அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அவரைச் சந்தித்து ‘கறார்’ கேள்விகளை நாம் அடுக்க, ‘சுரீர்’ பதில்களை அள்ளி வீசினார்.

“பி.ஜே.பி ஆட்சியில் தீவிரவாதம் குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். இப்போது, புல்வாமாவில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?”

“ஒரே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும். அதை வெகு விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்.”

“அப்படியெனில், மீண்டும் ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படுமா?”

“அதை என்னால் சொல்ல முடியாது. மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு அது.”

“அ.தி.மு.க-வுடன் பி.ஜே.பி கூட்டணி உறுதியாகி விட்டதா?”

“பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் அறிவிப்போம்.”

“ ‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற பி.ஜே.பி-யின் கோஷம் என்னவானது?”

“அது தி.க., தி.மு.க தான். அதில் அ.தி.மு.க வராது. கழகம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சி கிடையாது. தேச விரோத, இந்து விரோத, கடவுள் விரோதச் சித்தாந்தங்களைத்தான் கழகம் என்கிறோம்.”

[X] Close

[X] Close