பரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்! | Good Movies of 2018 in Tamil Cinema - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

பரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்!

ரசியல் சினிமாக்கள், தமிழ்நாட்டுக்குப் புதியதல்ல. சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே இந்திய தேசிய உணர்வை மையமாகக்கொண்ட நாடகங்களும் திரைப்படங்களும் தமிழகத்தில் உருவாகின. ஆனால், திராவிட இயக்கம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தபிறகே முழுமையான அரசியல் சினிமாக்கள் உருவாகின. ஏறத்தாழ திராவிட இயக்கத்தின் முன்னணி ஆளுமைகள் அனைவரும் திரைப்படங்களில் பங்குபெற்றார்கள். அதற்குப்பிறகு இயக்குநர்கள் பாரதிராஜா, பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், மணிவண்ணன், வேலு பிரபாகரன், சீமான், ஆர்.கே.செல்வமணி, எஸ்.பி.ஜனநாதன், வெற்றிமாறன், செல்வராகவன், ராம், சுசீந்திரன், பாலாஜி சக்திவேல், பா.இரஞ்சித் எனப் பலரும் வெவ்வேறு வகையான அரசியல் சினிமாக்களை எடுத்துள்ளனர்.

பொதுவாகத் தமிழில் வெளியான அரசியல் சினிமாக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மார்க்சியம், திராவிடம், தலித்தியம், தமிழ்த்தேசியம் என அரசியல் கருத்தியல்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படங்கள், பரபரப்பான அரசியல் சம்பவங்களைத் திரைக்கதையாக மாற்றும் ஆர்.கே.செல்வமணி பாணி திரைப்படங்கள், ‘ஊழலை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்’, ‘இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை குறைகிறது’ என்று மேலோட்டமான பொதுப்புத்தியை அடிப்படையாகக் கொண்ட ஷங்கர் பாணி திரைப்படங்கள். 2018-ல் தமிழில் ஆறு அரசியல் சினிமாக்கள் வந்துள்ளன.

விஜய்யின் அரசியல் வருகைக்குக் கட்டியம் கூறும்விதமாக வெளியானது ‘சர்கார்’. படம் வெளியாகும் முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகள். எந்த ஆழமான அரசியல் பார்வையும் இல்லாமல், பார்வையாளர்களை உடனடியாக உணர்ச்சிவசப்பட வைக்கும் ஷங்கர் பாணி படம்தான் ‘சர்கார்’. ஆரம்பத்தில் ஷங்கர் ‘அரசியல்’ படங்களை எடுத்தபோது அவை வெற்றிகரமாக ஓடினதான். ஆனால், சமூக வலைதளங்கள் வளர்ந்தபிறகு ஆழமான அரசியல் பார்வையும் வலுவான ஆதாரங்களும் இல்லாமல் மேலோட்டமான பொதுப்புத்தி சினிமாக்கள் எடுத்தால், அவை கிண்டலடிக்கப்படுகின்றன; கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அப்படிக் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளானது ‘சர்கார்’.  யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாத கதாநாயக சாகசம், பாத்திரங்களின் நம்பிக்கையற்ற சித்திரிப்பு, ஓட்டையான திரைக்கதை, அபத்தமான வசனங்கள் ஆகியவற்றால் ‘சர்கார்’ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

திராவிடக் கட்சிகளை விமர்சித்து, பல படங்கள் ஏற்கெனவே தமிழில் வந்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் தேவையை அங்கீகரித்து அதை விமர்சனபூர்வமாக அணுகின மணிவண்ணனின் படங்கள். ‘சர்கார்’ படமும் திராவிடக் கட்சிகளை மோசமான கட்சிகளாகச் சித்திரிப்பதாக நினைத்து கருணாநிதி வீட்டை நகலெடுத்த வில்லன் வீடு, வில்லிக்கு ‘கோமளவல்லி’ என்ற பெயர், இலவசப் பொருள்களைத் தெருவில்போட்டு உடைக்கும் கோமாளித்தனம் ஆகியவற்றைச் செய்திருந்தது. சமூக - அரசியல் - பொருளாதாரப் பார்வை இல்லாத ‘சர்கார்’ போன்ற படங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதன் மூலம்தான் உண்மையான அரசியல் சினிமாக்கள் உருவாக முடியும்.

‘சர்கார்’ ஷங்கர் பாணி படம் என்றால், ‘நோட்டா’, ஆர்.கே.செல்வமணி பாணி படம். சக்கர நாற்காலி தலைவர், மருத்துவமனை அரசியல் காட்சிகள், கோஷ்டிப் பூசல், அரசியல் சட்டத்தை எள்ளி நகையாடும்படியான திடீர் முதல்வர்கள் நியமனம்... என்று சமகால அரசியல் செய்திகளை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘நோட்டா’. ஷான் கருப்புசாமி எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் அது. ஆனால், எல்லா அரசியல் செய்திகளையும் ஒரே படத்துக்குள் திணிக்க வேண்டும் என்ற அவசரம், நாடகத்தனமான ஃபிளாஷ்பேக், நம்பகத்தன்மையற்ற காட்சிகள் ஆகியவற்றால் ‘நோட்டா’ ஒரு முழுமையான அரசியல் சினிமாவாக ஆக முடியாமல் அரைகுறை ஆக்கமாகவே வெளிவந்தது.

பா.இரஞ்சித்தின் வருகைக்குப் பிறகு தமிழில் சாதி ஒழிப்பு பற்றி வெளிப்படையாகப் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கின. வடசென்னை மக்கள், தலித் மக்கள் ஆகியோர்களை ரவுடிகளாகவும் அடிமைகளாகவும் சித்திரிப்பதாக, ஆதிக்கச்சாதியினரையும் நிலப்பிரபுக்களையும் பெருமைக்குரியவர்களாகவும் சித்திரித்துவந்த தமிழ் சினிமாவுலகில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ வரிசையில் இரஞ்சித்தின் ‘காலா’வும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘காலா’ படம், திரைக்கு வெளியே ரஜினியின் அரசியல் என்று பேசப்படுபவற்றுக்கு முற்றிலும் நேர் எதிராக இருந்தது.

மற்ற படங்களில் சாதி ஒழிப்பை முன்வைத்துப் பேசிய பா.இரஞ்சித், ‘காலா’ படத்தில் நேரடியாக இந்துத்துவ எதிர்ப்பை முன்வைத்தார். ‘தூய்மை இந்தியா’, ‘ராமர் அரசியல்’, ‘ராவண காவியம்’, ‘ஹெச்.ஜாரா’, (ஜாராவேதான்) ‘அம்பேத்கர், பெரியார், ஜோதிபா பூலே ஆகியோரின் படங்கள்’ என்று ‘காலா’ இந்துத்துவ எதிர்ப்பைக் காட்சிகள் மூலமாகவும் வசனங்கள் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் பேசியது. கலைநேர்த்தி குறைவு என்றாலும் நேரடியான அரசியல் சினிமா என்றவகையில், ‘காலா’ முக்கியமானது.

இந்த அரசியல் சினிமாக்களில் அதிகம் கவனிக்கப்படாமல்போனது கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’. கம்யூனிசம், பெரியார், திராவிட ஆதரவு, ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க எதிர்ப்பு, பி.ஜே.பி மீது வலுவான எதிர்ப்பின்மை, ஜெயமோகன், காந்தி, இந்திய தேசியம், அப்துல் கலாம், அன்னா ஹசாரே என்று குழப்பமான சித்திரமுடையவர் கமல்ஹாசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close