தமிழகம்... நேற்று இன்று நாளை! | Editorial page - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

தமிழகம்... நேற்று இன்று நாளை!

பெரியார், ராஜாஜி, காமராசர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா... என்று போர்க்குணம் மிக்கத் தலைவர்களைக் கொண்டிருந்த மாநிலம், தமிழ்நாடு. இன்றைக்கு தலைவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.

வெற்றிடத்தில் காலூன்றி விடலாம் என்று சிலர் கனவு காணலாம். ஆனால், தமிழ்நாடு எப்போதுமே தடுமாறியதில்லை. தன்மானத்திலும், தன்னம்பிக்கையிலும் தடம் மாறியதும் இல்லை. விதைத்தவர்கள் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தேடி வருவோர், இந்த பெருவிருட்சத்தின் கனிகளில் பசியாறுகிறார்கள். உழைத்தால் பிழைக்கலாம் என்று இங்கே நம்பி வந்தாரை எல்லாம் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

[X] Close

[X] Close