மேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்... | Jewellery shop Cheated Rs.500 crore from investors in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

மேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...

500 கோடி மக்கள் பணத்தை அமுக்கிய நகைக்கடை!

‘எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே’ என்பதுபோல, ‘எல்லா மோசடிகளும் கொங்கு மண்டலத்தில் இருந்தே’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்வில் கும்மியடிக்காத மோசடிகளே இல்லை. மண்ணுளிப் பாம்பு தொடங்கி, நாகரத்தினக்கல், ரைஸ் புல்லிங், ஈமுக்கோழி, நாட்டுக்கோழி, நிலமோசடி என டிசைன் டிசைனாகக் கடை விரித்தாலும், பணத்தை இழந்து கண்ணீர் சிந்துவதே பலருக்கும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது!

அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருக்கிறது நகை முதலீட்டு மோசடி. ‘ஸ்கிராப் கோல்டு எனப்படும் பழைய தங்க நகையை எடுத்துத் தொழில் செய்துவருகிறோம். பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்’ என டி.வி., பத்திரிகைகளில் கலர்கலராக விளம்பரம் கொடுத்தது, கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ‘முல்லை ஜூவல்லர்ஸ்’. கோயம்புத்தூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் எனப் பல இடங்களில் கிளையைத் திறந்து, சுமார் ரூ.500 கோடி வரை சுருட்டியிருக்கிறது இந்த முல்லை ஜுவல்லர்ஸ். மக்கள் முதலீடு செய்த பணத்திலிருந்தே இரண்டு மாதங்களுக்குப் பணம் கொடுத்து நம்ப வைத்திருக்கிறார்கள். நகை, வீடு எல்லாவற்றையும் அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் முதலீடு செய்தவர்கள், ‘எப்படியாவது எங்கள் பணத்தை மீட்டுத்தாருங்கள்’ எனக் கண்ணீரோடு ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி-யிடம் புகார் அளித்துவிட்டுப் பரிதாபமாகக் காத்துக்கிடக்கிறார்கள்.

[X] Close

[X] Close