உள்ளாட்சி என்னும் நல்லாட்சி! | Panchayat Council meetings in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

உள்ளாட்சி என்னும் நல்லாட்சி!

எஸ்.நந்தகுமார், பொதுச் செயலாளர், தன்னாட்சி.

தேர்தல் நேரங்களில் தவிர தலைவர்களையே பார்த்திராத கிராமத்து வாசிகள்... கிராமங்களையே காணாத கட்சித் தலைவர்கள்... வெகு காலமாக தமிழ்நாடு இப்படித்தான் இருந்தது. இப்போது கிராமங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள், அரசியல் தலைவர்கள். மக்களோடு மக்களாக உட்கார்ந்து ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்துகிறார்கள். அவர்களைப் பின்பற்றி, ஊடகமும் உள்ளே நுழைய, இதுவரை பரவிடாத வெளிச்சம், கிராமங்களிலும், அங்குள்ள மக்களின் முகங்களிலும் பரவுகிறது. சமூக வலைத்தளங்களிலும் கிராமத்து அவலங்கள், விவாதமாகின்றன. இவை அனைத்தும் நல்லதொரு தொடக்கம் கிராம சபைக் கூட்டங்கள் என்றால், ஏதோ ஓர் அரசாங்கச் சடங்கு என்றிருந்த நிலை மாறி, கூட்டம் நடைபெறுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே, களம் இறங்கி, வேலை களைத் தொடங்கிவிடுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். வட்டார வளர்ச்சி அலுவலரை யும் மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து கிராம சபை முறையாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்க இளைஞர்கள் வலியுறுத்துகிறார்கள். மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்த துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள். குறும்படங்கள் திரையிடுகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட கிராமப்புற இளைஞர்களைக் கண்டிப்பாய்ப் பாராட்ட வேண்டும். இங்குள்ள படுநெல்லி, புதுப்பாக்கம், கோவிந்தவாடி ஊராட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள், கிராம சபையில் பங்கேற்கும் மக்களை வெறும் பார்வையாளராக  இல்லாமல், கேள்வி எழுப்புவோராக மாற்றி யிருக்கிறார்கள். கிராம சபை அஜெண்டா பற்றி, அந்த மக்களுக்கு அத்தனையும் தெரிந்திருக்கிறது. அதென்ன கிராமசபை அஜெண்டா? ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை நடக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்தக் கூட்டங்களில், விவாதிக்கவேண்டிய பொருட்களின் அதிகாரபூர்வப் பட்டியல்தான் அஜெண்டா. இதைக் கூட்டம் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பே வெளியிடுகிறது ஊரக வளர்ச்சி இயக்குநரகம்.

ஜனவரி 26-ம் தேதி நடக்கும் கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய தலைப்புகளின் பட்டியல், ஜனவரி 20 அல்லது 21-ம் தேதியில் வெளியிடப்படும். அதைப் படித்துவிட்டு, கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றால், கேள்விகள் எழுப்பி நமது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். ஊருக்குத் தேவையானவற்றையும் கேட்டு வாங்கலாம். உதாரணமாக, ஜனவரி 26 கிராமசபை அஜெண்டாவில் 14 விவாதத் தலைப்புகள் இருக்கின்றன. அதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுவான செலவினங்கள் குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும் என்பதே முதல் பொருள். நடப்பு நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்பது எட்டாவது பொருள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close