திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்! | Story Theft issue in Tamil Cinema - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

திருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ந்து முதல் பத்து ஆண்டுகள் உழைத்து, அனுபவங்களை எல்லாம் சேர்த்து தன் முதல் படத்துக்கான கதையை எழுதுகிறார், ஓர் உதவி இயக்குநர். பின், அதைப் பெரிதாக யோசித்து, பலருடன் ஆலோசித்து பல கஷ்டங்களுக்குப் பிறகு முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்கிறார். பிறகு ஒரு ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ நேரம் வாங்கி அந்தக் கதையைச் சொல்லி, எப்போது அழைப்பு வரும் எனக் காத்துக்கொண்டிருக்கிறார். தனது எதிர்காலத்துக்கான காத்திருப்பு அது. அந்த நேரத்தில், இன்னொரு பெரிய டைரக்டரின் படத்திலோ, அதன் முன்னோட்டத்திலோ இவரது ஸ்கிரிப்ட்டில் உள்ள அதே காட்சிகள் இடம்பெற்றால் எப்படி இருக்கும் அவரது நிலைமை? திருடப்பட்டது கதை மட்டுமல்ல... அவரது எதிர்காலமும்தான்!

சென்ற ஆண்டு மட்டும் ‘சர்கார்’, ‘96’ என்று இரண்டு படங்கள், கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கின. இரண்டுமே 2018-ம் ஆண்டில் மிக முக்கியமான படங்கள். இவை தவிர, ‘தசாவதாரம்’, ‘கத்தி’, ‘மெட்ராஸ்’ எனப் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதை வெளியே சொன்னதால், சினிமாவிலிருந்து ஓரம்கட்டப்பட்டு காணாமல்போன உதவி இயக்குநர்கள் பலர் கோலிவுட்டில் உள்ளனர். இந்த வரிசையில் வெற்றிபெற்ற ஒரேநபர் வருண் ராஜேந்திரன் மட்டுமே. ‘சர்கார்’ படம், தனது ‘செங்கோல்’ கதையைப்போலவே இருக்கிறது என்று துணிச்சலாக வழக்குப்போட்டு, இறுதிவரை போராடி வெற்றிபெற்றார்.

சென்ற ஆண்டு வெளியான ‘96’ படத்தின் கதை, தான் 2012-ம் ஆண்டில் எழுதி விரைவில் உருவாக்கவிருந்த ‘பால்பாண்டி என்கிற பாரதி’ படத்தின் கதைதான் என பாரதிராஜாவின் உதவி இயக்குநர் சுரேஷ் சொல்லியிருந்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் முதலில் அந்தப் படம் உருவாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பின், தானே அதை ‘நீ நான் மழை இளையராஜா’ என்ற பெயரில் படமாக்கலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறினார். இயக்குநர் மருதுபாண்டியன் மூலம் கதை திருடப்பட்டு, ‘96’ படம் வெளியாகிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். ‘சர்கார்’ போல நீதிமன்றம்வரை செல்லாமல், பத்திரிகைச் செய்தியாக மட்டும் இது விவகாரம் அந்தச் சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

வருண் ராஜேந்திரனின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்பட்டது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜின் நிலைப்பாடுதான்.

[X] Close

[X] Close