டெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும்! - இனி என்ன செய்ய வேண்டும் நாம்? | Awareness of Dengue Fever and Swine Flu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

டெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும்! - இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

சுனாமி, புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களை தமிழகம் கடந்து மீண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் சுகாதார நிலைமையைப் பேண வேண்டிய சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஏற்படுத்திய செயற்கை பேரிடராக கடந்த சில ஆண்டுகளில் மக்களை வாட்டி வதைத்தது டெங்குவும், பன்றி காய்ச்சலும்தான். 

தொற்றுநோய்களில், உலகம்  முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது டெங்கு, பன்றிக்காய்ச்சல் இரண்டும்தான். உலக நாடுகளை அச்சுறுத்தும் நோய்கள் பட்டியலை 2019-ம் ஆண்டு உலக  சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த ஆண்டும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்கள் மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஓராண்டில் 39 கோடி பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். உலகில் 40 விழுக்காடு மக்களுக்கு டெங்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் 25 ஆயிரம் உயிரிழப்புகள் டெங்கு காய்ச்சலால் ஏற்படுகின்றன. பன்றிக்காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் 5.75 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.

தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் மட்டும் 3,636 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலின் தாக்குதலுக்கு 2,812 பேர் ஆளாகி உள்ளனர்; அவர்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இவை தவிர, சிக்குன்குன்யா, மலேரியா, வயிற்றுப்போக்கு, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் என்று பல்வேறு தொற்றுநோய்கள் 2018-ம் ஆண்டில் அணிவகுத்து நின்றன. மருத்துவக் குறியீடுகளில் உயர்ந்து நிற்கும் தமிழகம், டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுப்பதில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. பொது சுகாதாரத் துறைக்கென்று தமிழக அரசின் சார்பில், ஆண்டுக்கு மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. எனினும், இந்த காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறது மாநில அரசு.

[X] Close

[X] Close