பாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே! | Cyclone Gaja Damaged One Crore Coconut Trees - Govt carelss for Compensation - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

பாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே!

கறார் காட்டும் அரசு... கண்ணீரில் தஞ்சை விவசாயிகள்...

ஜா புயலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் துயரங்கள் தீர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று தெரியவில்லை. புயல் கடந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேளாண்மைத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள் இருக்கும் மாவட்டங்களிலேயே விவசாயிகளின் குறைகள் களையப்படவில்லை. அரசுப் பதிவேட்டில் இருக்கும் தென்னை மரங்கள் மட்டுமே இழப்பீடு வழங்குவதற்காகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மரங்களில், பாதிக்குப்பாதி தென்னை மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு கொடுப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கஜா புயலால் 60,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த, சுமார் ஒரு கோடி தென்னை மரங்களை விவசாயிகள் இழந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கணக்கெடுத்ததிலும் பல்வேறு குளறுபடிகளை நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டு கிறார்கள் தென்னை விவசாயிகள்.

இதுகுறித்து பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி வீரசேனன், “எங்கள் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்களை இழந்திருக்கிறோம். ஆனால், 35,000 ஹெக்டேர் நிலத்தில், 52 லட்சம் தென்னை மரங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கணக்கு எழுதியிருக்கிறார்கள். நஞ்சை, புஞ்சை மனைகளிலிருந்த தென்னைகளைக் கணக்கில் கொள்ளவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close