மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்!

வெயிலில் களைத்துவந்த கழுகாரிடம் சில்லென்று மாம்பழ கூல்டிரிங்க்ஸ் கொடுத்ததும், ‘‘எல்லோரும் மாம்பழத்தைப் பிழிந்தெடுக்கி றார்கள் என்றால்... இங்கேயுமா?’’ என்று கலாய்த்தவர், பழரசத்தைச் சுவைத்துக்கொண்டே, செய்தி களுக்குள் புகுந்தார்.

‘‘அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி உருவானது குறித்து உமது நிருபர் கொடுத்துள்ள விரிவான கட்டுரையைப் பார்த்தேன். கச்சிதம். இன்னும் சில விஷயங்களைச் சொல்கிறேன்... இந்தக் கூட்டணியில் அன்புமணிக்கு முதலில் வருத்தம்தான். ஆனால், அவரும் ‘கூலாகி’விட்டார். அதற்கான இரு காரணங்களும், அவரது பெயரிலேயே இருக்கின்றன!’’

‘‘புரிகிறது... புரிகிறது... சொல்லும்!’’

‘‘ராமதாஸிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டிய அன்பு, அன்புமணியைக் கரைத்துவிட்டதாம். கூட்டணி முடிவான நாளில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் தேநீர் விருந்து தந்தபோது, ரொம்பவே அனுசரணையாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘பொதுவாக நான் என் சமூகத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாகப் பேசுகிறார்கள். குறிப்பாக, வடமாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைக் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகிறார்கள். அது உண்மை இல்லை. ராமசாமி படையாச்சியார் படத்திறப்பு, வன்னியர் நல வாரியம் என்று என்னால் முடிந்ததையெல்லாம் உங்கள் சமுதாயத் துக்குச் செய்துவருகிறேன். இந்தக் கூட்டணியைப் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு வேண்டியதைச் செய்துகொள்ளுங்கள். ‘போஸ்ட்டிங்’ உட்பட பலவற்றை நாங்கள் முடித்துத் தருகிறோம்’ என்று பேசியிருக்கிறார். இதில்தான் அன்புமணி ‘கூல்’ ஆகிவிட்டாராம்!’’

‘‘எல்லாம் சரி... கூட்டணி என்னவோ சக்சஸ் ஆகிவிட்டது. ஆனால், உள்ளுக்குள் சர்க்கஸ் ஆரம்பித்துவிட்டது என்கிறார்களே!’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close