"வார்த்தை தவறிவிட்டார் ராமதாஸ்!" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி | Rajeshwari Priya interview about exit from PMK - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

"வார்த்தை தவறிவிட்டார் ராமதாஸ்!" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி கையெழுத்தானதைத் தொடர்ந்து பா.ம.க-விலிருந்து வெளியேறியிருக்கிறார், அந்தக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ராஜேஸ்வரி பிரியா. பிப்ரவரி 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இவர், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ராமதாஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். அவரை சந்தித்துப் பேசினோம்.

“பா.ம.க-விலிருந்து நீங்கள் வெளியேறியதற்கு உண்மையான காரணம் என்ன?’’

“எட்டு ஆண்டுகள் சிங்கப்பூரில் வசித்துவந்த நான், ‘இந்தியாவிலும் சிங்கப்பூர் போன்ற நேர்மையான அரசியலைக் கொண்டுவர வேண்டும்’ என்ற சேவை நோக்கத்துடன்தான் தாயகம் திரும்பினேன். ‘கொள்கைப் பிடிப்பில்லாத, ஊழல் கட்சிகளான திராவிடக் கட்சிகளை ஒழிப்போம்’ என்று சொல்லிவந்த பா.ம.க-வை நம்பி, அந்தக் கட்சியில் இணைந்தேன். இப்போது, அவர்களும் மற்றக் கட்சிகளைப்போல சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டார்களே என்ற விரக்தியில், கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். இதுதான் உண்மை!’’

[X] Close

[X] Close