விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்... | Discuss about PMK and ADMK alliance - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

விடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...

இலையோடு மாம்பழம் இணைந்தது இப்படிதான்!

து 2009-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி. போயஸ் கார்டன். அன்றைய தினம் முதல்முறையாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்காகக் கைகுலுக்கினார் ராமதாஸ். அப்போது, பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஏழு. பத்து ஆண்டுகள் கழித்து, வரலாறு திரும்பியிருக்கிறது. மீண்டும் அதே கூட்டணி. அதே எண்ணிக்கையிலான சீட் ஒதுக்கீடு. தலைமையும், இடமும் மட்டுமே மாற்றம்.

2016 சட்டமன்றத் தேர்தலில், 232 தொகுதிகளில் தனித்து நின்று, மாம்பழத்தின் பலத்தைப் பார்த்தார் ராமதாஸ். வெற்றி எட்டாக்கனியாகி விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு கழகங்களையும் கழுவிக்கழுவி ஊற்றினார். அ.தி.மு.க அரசின்மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அறிக்கைகளைத் தெறிக்கவிட்டார். ‘அ.தி.மு.க-வின் கதை’ என்று புத்தகம் போட்டு, எம்.ஜி.ஆர் முதல் இ.பி.எஸ் வரை எல்லோர்மீதும் வசைமாரி பொழிந்தார்.

[X] Close

[X] Close