நிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்? | Nirmaladevi case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

நிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்?

தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, பேராசிரியை நிர்மலாதேவி விவகாரமும் சூடு கிளப்பத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், அதிகாரத்தின் கரங்கள் நீள்கின்றனவோ என்ற சந்தேகம் இயல்பாகவே மக்களிடம் உருவாகியுள்ளது. தவிர, “நிர்மலாதேவியைச் சிறைக்கு உள்ளேயே சாகடிக்க வேண்டும் என அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார்” என்று நிர்மலாதேவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ள தகவல், இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

இதுவரை சிறைக்கும் நீதிமன்றத்துக்கும் அமைதியாக வந்துசென்றுகொண்டிருந்த நிர்மலாதேவி, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது, உடன் வந்த பெண் காவலர்கள், அவரது வாயைப் கைகளால் பொத்தி வலுக்கட்டாயமாக மூடிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இதுகுறித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர்கள், “அடிப்படை மனித உரிமை மீறல் இது. சிறைக் கைதிகளுக்கான உரிமை மீறல் இது. இத்தனைக்கும் நிர்மலாதேவி, தண்டனை அறிவிக்கப்பட்ட கைதி கிடையாது. அவர் செய்த குற்றம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதனால், அவர் வெறும் விசாரணைக் கைதி மட்டுமே. அவருக்கு ஏன் இத்தனை வலுக்கட்டாயமான வாய்ப்பூட்டு. இந்த விஷயத்தில் அந்தப் பெண் காவலர்களைத் துளியும் குற்றம் சொல்ல முடியாது. அந்தப் பெண் காவலர்களுக்கு எந்தளவுக்கு நெருக்கடியும்... மேலிடத்திலிருந்து மிரட்டலும் வந்திருந்தால், ‘நிர்மலாதேவி ஏதேனும் பேசிவிடுவாரோ..’ என்ற அச்சத்தில் பதறியபடி, அவரது வாயைப் பொத்தியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் எங்கிருந்து ஏவப்படுகிறது இப்படி ஒரு சர்வாதிகார அம்பு? யார் விடுக்கும் அம்பு இது?” என்று கொதித்தார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close