“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை!” | Veena Gayathri shares memories of Jayalalitha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை!”

- பெங்களூருக்கு இடம் மாறும் வீணை காயத்ரி...

‘‘அம்மாவுக்கும் எனக்குமான நட்பு, இருபத்தாறு வருடங்கள் பின்னிப்பிணைந்தது... அம்மாவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் இல்லாத ஊரில் இருக்கவும் பிடிக்கவில்லை. பெங்களூருக்கு குடியேறப்போகிறேன்...” கண்ணீரைத் துடைத்தபடிப் பேசுகிறார் வீணை காயத்ரி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற தோழியான வீணை காயத்ரி, தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி 24) முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

‘‘என் அப்பா அஸ்வத்தாமன், இசையமைப்பாளர். தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா நடித்த படங்களுக்கும் அப்பா இசையமைத்திருக்கிறார். சின்ன வயதில் ஜெயலலிதா, தன் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு வருவதையும், அவரது சுட்டித்தனத்தையும் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு நடிகையாக, பாடகியாக, நடன மங்கையாக ஜெயலலிதாவின் திறமைகளைக்கண்டு பிரமித்திருக்கிறேன். மேடைப் பேச்சாளராகவும், அரசியல்வாதியாகவும் அவர் உருவெடுத்த போது, அவரது துணிச்சல் என்னையும் ஆக்கிரமித்தது. அதுவரை ஜெயலலிதாவை எட்டியிருந்தே பார்த்திருந்த நான், ஒருமுறை அவரை நேரில் சந்தித்தேன். அந்தத் தருணத்தை எப்போதும் மறக்க முடியாது. முதல்முறை சந்திப்பில், ‘நீங்கள் அஸ்வத்தாமன் சாரின் மகளா?’ என்று கேட்டுவிட்டு அப்பா குறித்தும், இசை குறித்தும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, ‘விரைவில் சந்திப்போம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

[X] Close

[X] Close