‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்... | Ayya Vazhi separate religion issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

‘அய்யா வழி’... தனி வழியா? - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...

ர்நாடகாவில் லிங்காயத்து சமூகத்தைத் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மாநில அரசு சார்பாக மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வாழும் அய்யா வழி வழிபாட்டைப் பின்பற்றுபவர்களையும் தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. தமிழக சட்டமன்றத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராதாபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பத்துரை பேசியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் கலி  என்னும் மாய அரக்கனை அழித்து, அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்துச்செல்ல நாராயணன் எடுத்த அவதாரமே, வைகுண்ட அவதாரம் என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்திய அய்யா வைகுண்டரை, விஷ்ணு அவதாரம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்களை, தனி மதத்தினராக அறிவிக்க வேண்டும் என்று பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுக் கின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தெஷணமாற நாடார் சங்கத்தின் முன்னாள் தலைவரான சபாபதி நாடார் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, “அய்யா வைகுண்டர் வழிபாட்டை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும்’’ என்று மனு அளித்தார். 

[X] Close

[X] Close