டி.வி சேனல் கட்டணம் மாற்றம்... சாதகமா... பாதகமா? | Cable TV and Dish TV charges increase issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

டி.வி சேனல் கட்டணம் மாற்றம்... சாதகமா... பாதகமா?

டிராய் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பிறப்பித்துள்ள புதிய ஆணையால் டிசம்பர் 29-ம் தேதி முதல் கேபிள் மற்றும் டிஷ் சேவைகளின் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப் படவுள்ளன. இந்தத் துறையில் கூடுதல் வெளிப்படைத் தன்மை வேண்டியும், அனைத்து அரசு மற்றும் தனியார் ஒளிபரப்பு சேவைகளையும் ஒழுங்குப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, 130 ரூபாய் கட்டணமாகச் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தூர்தர்ஷன் உட்பட 100 சேனல்கள் வழங்கப்படும். இதற்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து, ரூ.153.40 கட்டணம் வரும்.  கூடுதலாக, கட்டணமில்லாத சேவைகளாகக் கருதப்படும் 25 சேனல்களுக்கு ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேலும், கட்டண சேனல்களுக்கும் அதற்குரிய கட்டணத்தைக் கட்ட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick