ரத்தக் ‘கறை’! - கொலைகார அரசுத்துறை | Pregnant Woman Given HIV-Infected Blood - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரத்தக் ‘கறை’! - கொலைகார அரசுத்துறை

ருத்துவ சேவைக்குப் பெயர் பெற்றிருந்த தமிழக சுகாதாரத் துறை வெட்கித் தலைகுனிய நேரிட்டிருக்கிறது. தமிழக அரசு மருத்துவமனையின் சேவையை நம்பி வந்த ஒரு சாமானியப் பெண்ணுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது இந்த அரசு நிர்வாகம். அந்த ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு, தனது வாழ்நாளில் என்றைக்கும் குணப்படுத்த இயலாத ஹெச்.ஐ.வி பாதிப்பை உண்டாக்கி, துடைக்க முடியாத கறையை ஏற்படுத்தியிருக்கிறது கொலைகார  சுகாதாரத்துறை. சாத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ள இந்தக் கொடுமை, அலட்சியத்தின் உச்சத்தில் இந்த அரசுத்துறை இருப்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் எட்டு லட்சம் பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதன் மூலம் 12 லட்சம் நோயாளிகள் பயனடைகின்றனர். தேசிய அளவில் ரத்த தானத்தில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. இப்படி ரத்த தானம் அளிப்பவரிடம் 60 கேள்விகள் அடங்கிய ஒரு விண்ணப்பத்தில் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களை வைத்தே, அவர் ரத்த தானம் வழங்கத் தகுதியானவரா, இல்லையா என்று பெரும்பாலும் அறிந்துகொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் கொடுத்த அந்த இளைஞரிடம் அதுபோன்று ஒப்புதல் பெறப்பட்டதா என்பதே தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick