பயிற்சி... நெகிழ்ச்சி... ‘மீண்டு எழுவோம்!’ - தெம்பாகும் தென்னை விவசாயிகள்

ஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், முதற்கட்டமாக  2,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் விகடன் வாசகர்களின் சார்பாக வழங்கப்பட்டன. அடுத்ததாக, புயலுக்குத் தென்னை மரங்களைப் பறிகொடுத்துவிட்டு, துயரத்தில் தவிக்கும் தென்னை விவசாயிகளுக்கு  நம்பிக்கையூட்டவும் மீட்டெடுக்கவும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தில் பவானி என்பரின் தோப்பிலும், பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடியில் சோம.சிவக்குமார் என்பவரது தோப்பிலும் இரண்டு நாள்கள், இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரும் பேராசிரியருமான செந்தூர்குமரன் இதில் கலந்துகொண்டு, பாதித்த தென்னை மரங்களைக் காப்பாற்றும் வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளித்தார். குறிப்பாக, சாய்ந்த குருத்துகளை மீட்டெடுக்கும் தொழில்நுட்பங்கள், வீழ்ந்து கிடக்கும் மட்டைகளை உரமாக்கும் முறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் பல்வேறு கிராமங்களிலிருந்து பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick