பதவி உயர்வுக்கு லஞ்சம்! - தொடர் சர்ச்சையில் அண்ணா பல்கலை.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்ச்சைகள் தொடர்கதையாகிவருகின்றன. தேர்வில் மறுகூட்டல் செய்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் ஊழல், பழைய வினாத்தாள்களில் இருந்த கேள்விகளையே சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்விலும் வைத்தது என்று தொடரும் சர்ச்சைகளை அடுத்து, பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு வாட்ஸ்அப்பில் பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கூறுகையில், ``சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தவர்கள், உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவர். எட்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருந்தால் இணைப் பேராசிரியர்களாகவும், 13 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருந்தால் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு கிடைக்கும். சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பதவி உயர்வு தொடர்பாகப் புதிய விதிகள் பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில், பதவி உயர்வு பெற புதிய நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன்படிதான் தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி உயர்வு கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள், போதிய தகுதி இல்லை என  நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick