"தீனதயாளனை விசாரித்தால் உண்மைகள் வெளியே வரும்!"

பொன்.மாணிக்கவேலை நெருக்கும் அதிகாரிகள்...

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி-யாக இருந்த, இப்போது சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேலை அந்தப் பொறுப்பிலிருந்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது தமிழகக் காவல்துறை. பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி-யிடம் கொடுத்த புகார்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டுவருகின்றன. இன்னொரு பக்கம், பொன்.மாணிக்கவேல் பறிமுதல் செய்த சிலைகள், உண்மையிலேயே புராதனத் தன்மை கொண்டவைதானா என்பதை மறுவிசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், பொன்.மாணிக்கவேல் மீது புகார் கொடுத்தவர்களில் ஒருவரான ஏ.டி.எஸ்.பி இளங்கோவிடம் பேசினோம். ``ஏ.டி.எஸ்.பி-க்கள் முதல் காவலர்கள் வரை 208 பேர்  மாற்றுப்பணியில்  பொன்.மாணிக்கவேலின் கீழ் பணியாற்றினோம். சிலைக் கடத்தல் வழக்குகளைப் பிரித்துக்  கொடுத்து  விசாரிக்கும்படிப் பணிகளை அவர் எங்களிடம் ஒப்படைத்தார். ஆனால், அவர் எங்களைச் சுதந்திரமாக விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஏ.டி.எஸ்.பி குமார், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். ஏ.டி.எஸ்.பி-க்கள் அசோக்குமார், சந்திரசேகர் ஆகியோர் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick