சத்துணவு ஒரு தலைமுறையின் ஏக்கம்! - அதை அழிப்பதுதான் தமிழக அரசின் நோக்கமா?

ழைக் குழந்தைகளின் வயிற்றில் அடிக்கவும் துணிந்துவிட்டது தமிழக அரசு. எத்தனையோ சமூக நலத் திட்டங்களை திராவிடக் கட்சிகள் கொண்டுவந்திருந்த போதிலும், பள்ளி மாணவர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டம்தான் இன்றளவும் நாட்டுக்கே முன்னோடித் திட்டமாக இருக்கிறது. அதைச் சொல்லிதான் அ.தி.மு.க-வினரும் வாக்கு கேட்கிறார்கள். ஆனால், அந்தத் திட்டத்தை அவர்களே அழிக்கவும் துணிந்து விட்டார்கள் என்பதுதான் வயிற்றில் அடிக்கும் நிஜம்!

1960-களில் தமிழகத்தை ஆண்ட காமராஜர், பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மாடு மேய்த்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்து வேதனையடைந்தார். அந்தக் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று காமராஜர் கொண்டு வந்ததுதான் மதிய உணவுத் திட்டம். அந்தத் திட்டத்தின் பயனாக ஏராளமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்தார்கள். மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்பட்டது. இதேத் திட்டத்தை, 1982-ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ‘சத்துணவுத் திட்டம்’ என்று மேம்படுத்தினார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதை இன்னமும் மேம்படுத்தி முட்டை, சுண்டல், கீரை, கலவை சாதம் என்று சாதனைப் படைத்தார்கள். இந்தத் திட்டத்தால் இப்போதும் பல லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick