உறுப்பு தான முறைகேடுகள் உண்மைதான்! - மோசடியை உறுதிப்படுத்திய அரசுக் குழு... | Organ donate scam is confirmed by 4 members committee - Junior vikatan | ஜூனியர் விகடன்

உறுப்பு தான முறைகேடுகள் உண்மைதான்! - மோசடியை உறுதிப்படுத்திய அரசுக் குழு...

டல் உறுப்பு தானம் என்கிற பெயரில் தமிழகத்தில் நடக்கும் பகீர் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு நியமித்த நான்கு பேர் கொண்ட குழு. இவர்கள் நடத்திய விசாரணையில், கோவை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் முறைகேடுகள் 245 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டும், அரசுத் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

“சிறுநீரகம் ரூ.10 லட்சம்... இதயம் ரூ.40 லட்சம்... கல்லீரல் ரூ.60 லட்சம்!” என்ற தலைப்பில் 24.01.2018 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் உடல் உறுப்பு தான மோசடி குறித்து எழுதியிருந்தோம். தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவும் இதையே இப்போது உறுதிசெய்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடந்த மே மாதம் எழுதியக் கடிதத்தில், ‘பாலக்காடு மாவட்டம், நெல்லிமேடு சித்தூரைச் சேர்ந்த மணிகண்டன், விபத்தில் காயமடைந்து சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, 21.5.2018-ம் தேதி, ‘மணிகண்டன் மூளைச்சாவால் இறந்துவிட்டார். அவரது உறுப்புகளைத் தானம் கொடுங்கள். இல்லாவிடில், சிகிச்சை அளித்ததற்கு கட்டணம் செலுத்துங்கள்’ என்று மணிகண்டனின் உறவினர்களிடம் மிரட்டியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அவர்களது இயலாமையைப் பயன்படுத்தி மிரட்டி, உறுப்பு தானத்துக்குச் சம்மதிக்க வைத்து, உறுப்புகளைத் திருடியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

உடனடியாக, காவல்துறை துணை ஆணையர் தாமஸ் பிரபாகரன் தலைமையில் தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உள்ளடக்கிய நால்வர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்த குழு 19 நாள்கள் விசாரணை நடத்தி, அந்தச் சம்பவம் உண்மை என உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவங்கள் மட்டுமின்றி, இதற்கு முன் தமிழகத்தில் நடந்த உடல் உறுப்பு தானம் தொடர்பான முறைகேடுகளையும் கண்டுபிடித்து, 245 பக்கங்களில் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது அந்தக் குழு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick