மிஸ்டர் ட்ரம்ப்... சிரியாவிலிருந்து வெளியேறுவது சரியா?

மெரிக்க ராணுவம் சிரியாவிலிருந்து 100 நாள்களில் வெளியேறும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். இது அமெரிக்காவின் நேச நாடுகளை மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்துக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவால், ஒடுக்கப்பட்டிருக்கும் தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தலைதூக்கும்; மத்தியத் தரைக்கடல் பகுதியில் மீண்டும் உள்நாட்டுப் போர்கள் ஏற்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது.

அல்-கொய்தா அமைப்பிலிருந்து 2014-ல் பிரிந்துவந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள், சிரியாவிலும் ஈராக்கிலும் முக்கிய இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர். அங்கெல்லாம் பழைமைவாத ஷரியா சட்டத்தைச் செயல்படுத்தி, காலிஃபேட் சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள். குறுகிய காலத்தில், மத்தியத் தரைக்கடல் கரையிலிருந்து தெற்கு பாக்தாத் வரை தங்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். ஆள்கடத்தல், இனப்படுகொலை, பாலியல் வன்முறைகள் என அவர்களின் கொடூர நடவடிக்கைகள் உலகை அதிர வைத்தன. 2015-ம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது அமெரிக்கா. ரஷ்யாவும் சிரிய அரசுக்குக் கைகொடுக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த 95 சதவிகித இடங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில்தான், சிரியாவில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். ஆனால், இது ராணுவ ஆலோசனையை மீறி எடுக்கப்பட்டது என அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  ட்ரம்ப்பின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஜிம் மாட்டிஸ், கூட்டுப் படைகளின் அமெரிக்கத் தூதர் ப்ரெட் மெக் குர்க் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick