கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்... இளைஞரின் மரணத்தில் சந்தேகம்! | Pregnant Woman Given HIV-Infected Blood - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்... இளைஞரின் மரணத்தில் சந்தேகம்!

ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதால் தமிழக அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச வீடு, அவரின் கணவருக்கு அரசு வேலை என்று பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்ட ரத்தத்தை வழங்கிய இளைஞர் மரணமடைந்திருப்பது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணைச் சேர்த்த பிறகுதான் அவரின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சாத்தூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பே, ரத்தம் வழங்கிய இளைஞர் தன் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி இருப்பதால் ‘யாருக்கும் அதைக் கொடுக்காதீர்கள்’ என சிவகாசி ரத்த வங்கியில் கூறிவிட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதை விசாரிக்க உத்தரவிடாத விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன், மாறாகப் பாதிக்கப்பட்ட பெண் தரப்பிடம், ‘இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்த வேண்டாம். ஊடகங்களிடம் இது தொடர்பாக எந்தத் தகவலும் தரக் கூடாது. நிவாரணம் பெற்றுத்தரவும், அரசுப் பணி தரவும் நடவடிக்கை எடுக்கிறோம்’ எனப் பேரம் பேசி மிரட்டியதைப் பற்றிப் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதாரத் துறைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick