தப்பாட்டம் ஆடுகிறாரா மார்ட்டின் மருமகன்? - கூடைப்பந்து கழகத்தில் சடுகுடு

மிழகத்தைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ அர்ஜுனா தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டுக் கழக மாநிலச் செயலாளராக இருக்கிறார். அந்தப் பதவியைத் தக்கவைக்க, கூடைப்பந்துக் கழக நிர்வாகிகளை அதிரடியாக நீக்கிவருவதாக அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“மார்ட்டினின் மகளைத் திருமணம் செய்துகொண்டதால் தொழிலதிபரான ஆதவ அர்ஜுனா, கூடைப்பந்து கழகத்துக்குள்ளும் பின்வழியாக நுழைந்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இவரால், கூடைப்பந்து கழகமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. நாட்டுக்காக விளையாடிய பல வீரர்களை நிர்வகித்துவந்த தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டுக் கழகத்தில், மார்ட்டினின் மருமகன் கடந்த வருடம் நுழைந்தபின், பிரச்னைகள் தொடங்கி விட்டன” என்பது அவரது எதிர்த் தரப்பினர் ஆதவ அர்ஜுனா மீது வைக்கும் குற்றச்சாட்டு.

இதுபற்றி கூடைப்பந்துக் கழக வட்டாரத்தில் பேசியபோது, ‘‘2015-ல் நடந்த கூடைப்பந்துக் கழகத் தேர்தலில், ராஜ்சத்யன் தலைவராகவும், சுரேன் செயலாளராகவும் வெற்றிபெற்றனர். கூடைப்பந்து விளையாட்டுமீது ஆர்வம் கொண்ட  குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் வீரரான சுரேன் மீது பணமோசடி புகார் கிளப்பியதால், அவர் ராஜினாமா செய்தார். விதிப்படி அவரது ராஜினாமாவைப் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டனர். இந்தச் சூழலில் தலைவர் ராஜ்சத்யனுக்கு நண்பராக அறிமுகமாகி, போட்டிகளில் கலந்து கொள்கிறவர்களுக்கு, தன் நிறுவனம் சார்பில் சீருடைகள் ஸ்பான்சர் செய்வதாகக்கூறி ஆதவ் அர்ஜுனா உள்ளே நுழைந்தார். பின்பு தூத்துக்குடி  மாவட்டக் குழுவில் நுழைக்கப்பட்டு, அங்கிருந்து  குறுக்கு வழியில் மாநிலச் செயலாளர் பொறுப்பில் உட்கார்ந்துவிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick