குடிநீர் தனியார்மயம் - மக்களுக்குத் துரோகம் இழைக்கிறதா அரசு? | Water distribution Privatization issue in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/01/2019)

குடிநீர் தனியார்மயம் - மக்களுக்குத் துரோகம் இழைக்கிறதா அரசு?

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரையிலும் போராட்டம்!

வித்த வாய்க்குத் தண்ணீர் கொடுப்பதுதான் தமிழர் பண்பாடு. அந்தத் தண்ணீர் விநியோகத்தைத் தனியாரிடம் கொடுத்து, வணிகப் பண்டமாக்கி மக்களைத் தவிக்கவிடும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக அரசு. ஏற்கெனவே, கோவையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை மற்றும் திருச்சி நகரங்களிலும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்பதால், இதற்கான வேலைகளை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் ரகசியமாகச் செய்துவருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், இது பற்றிய தகவல்களைத் திரட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் பேசினோம். “குடிநீர் விநியோகத்தைத் தனியாரிடம் கொடுப்பது, அதிலும் பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது, அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை. குறிப்பாக, வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம். சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையர், ‘தண்ணீரை மக்கள் விரயம் செய்கிறார்கள். இதைத் தடுக்க, சரியான நேரத்தில் தண்ணீரை வழங்கினால், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கவும் மக்கள் தயங்கமாட்டார்கள். அதனால், தண்ணீர் வீணாகாது’ என்று பேசியுள்ளார். அவர் சும்மா ஒன்றும் அப்படிப் பேசிவிடவில்லை. கோவையைப் போல, மதுரையிலும் குடிநீர் விநியோகத்தைத் தனியாரிடம் கொடுப்பதற்கான பணிகளைச் செய்துவருகிறார்கள். இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க