தமிழக அரசின் புத்தாண்டுப் பரிசு! -அமலுக்கு வந்தது பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் ஷீட்கள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு விதித்தத் தடை, புத்தாண்டுப் பரிசாக ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் இந்தத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும்... மாற்றத்தை நோக்கி மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றனர். 

அதிகாலையில் பல் துலக்கும் பிரஷ் தொடங்கி பேஸ்ட்டைப் பிதுக்கும் குப்பி, சோப்பு கவர், ஷாம்பு கவர், சவரம் செய்யும் ரேஷர், சவர லோஷன் குப்பி, தேங்காய் எண்ணெய் டப்பா, குடிநீர் பாட்டில், பால் பாக்கெட், பிஸ்கெட் பாக்கெட், பிரட் பாக்கெட், சாம்பார் மசாலா கவர், கோதுமை மாவு கவர், தோசை மாவு கவர், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் வாழை இலை, சிகரெட் பாக்கெட் கவர், லைட்டர் சாதனம், டீக்கடை தொடங்கி டாஸ்மாக் கடை வரையில் புழங்கும் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்கள், சோடா,  குளிர்பானப் புட்டிகள், கடைசியாக ‘காண்டம்’  பாக்கெட் வரை... அத்தனையும் பிளாஸ்டிக் பொருள்கள். மூச்சு வாங்குகிறதுதானே... பூமிக்கு எப்படி எல்லாம் மூச்சடைக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick