ஐடியா அய்யனாரு!

‘பேட்ட’ படத்தின் டிரெய்லரில் ரஜினி நடந்துவரும் காட்சியில் மெழுகுவர்த்திகள் சில அணைகின்றன. இறுதியாக இரட்டை மெழுகுவர்த்திகள் மட்டும் எரிந்து, பின்பு அவையும் அணைகின்றன. இரட்டை மெழுகுவர்த்திகளைக் குறியீடாகக் காட்டி அண்ணன் சீமானை ஒரண்டை இழுக்கும் முயற்சி என்று காலரைப் பிரட்டி, முடியைச் சிலுப்பிக் குதிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதேபோல், அவர்களுக்கே தெரியாத வேறு சில குறியீடுகளும் அந்த டிரெய்லரில் இருக்கின்றன. கண்டுபிடிச்சு சொல்றேன், குறிச்சிக்கோங்க!

டிரெய்லரின் முதல் காட்சியிலேயே மலை வாசஸ்தலத்தைக் காட்டுகிறார்கள். அது வேறொன்றும் இல்லை, கொடநாடு எஸ்டேட்டைதான் உவமையாகக் காட்டி ஊமைக்குத்து குத்தியிருக்கிறார்கள். ரஜினியின் அரசியல் களத்தில் (ஒருவேளை அரசியலுக்கு என்றாவது வந்தால்) சிறப்பான, தரமான சம்பவங்களை இனிமேல்தான் பார்க்கப்போறீங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick