அதிகார மோதலில் அமைச்சர்கள்! - சின்னாபின்னமான வேலூர் அ.தி.மு.க

மைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோஃபர் கபில் இடையே அதிகார மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதால், வேலூர் மாவட்ட அ.தி.மு.க சின்னாபின்னமாகப் பிளவுபட்டுள்ளது.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஜோலார்பேட்டை தொகுதி. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், வாணியம்பாடி தொகுதி. இவர்களின் அதிகார மோதலுக்கு முக்கியக் காரணம், இவ்விரு தொகுதிகளும் அருகருகே இருப்பதுதான். வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக வீரமணி இருப்பதால், ‘பெண் அமைச்சர் தன்னிடம் கேட்டுவிட்டே எதையும் செய்ய வேண்டும்’ என்று அவர் நினைக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.

‘‘குறுநில மன்னரைப் போல் வீரமணியின் செயல்பாடு உள்ளது. அதனால், நிலோஃபர் கபில் சொந்த முடிவின் அடிப்படையில் செயல்படுகிறார்’’ என்கின்றனர் நிலோஃபரின் ஆதரவாளர்கள். மேலும், ‘வீரமணி பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு நிலோஃபரை சமீபகாலமாக அழைப்பதில்லை. அரசுத்துறை விழாக்களிலும் அவரைப் புறக்கணிக்கிறார்கள்’ என்பதும் நிலோஃபர் தரப்பின் குற்றச்சாட்டு. இதை உறுதிப்படுத்துவதைப்போல், கடந்த சில மாதங்களாக வீரமணி கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளில் நிலோஃபர் பங்கேற்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick