“லட்சம் பெருசா... 30,425 பெருசா..?”

மா.செ பதவிக்காக காய்நகர்த்தும் செந்தில்பாலாஜி!

தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் தனது செல்வாக்கைக் காட்டுவதற்காக கரூரில் பொதுக்கூட்டம் நடத்தி, 30,425 பேரை தி.மு.க-வில் இணைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனால், முக்கியப்புள்ளிகள் யாரும் அவருடன்  தி.மு.க-வில் இணையவில்லை. இது தி.மு.க தரப்பைச் சற்றே ஏமாற்றம் அடையச் செய்தாலும், இந்த இணைப்புக் கூட்டத்தை முன்வைத்து செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், “இது சாம்பிள்தான் இனிமேல்தான் ஒரிஜினல் ஆட்டம் ஆரம்பமாகும்” என்கிறார்கள் தெம்பாக!

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்தார். அப்போதே அவர் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம், ‘வெகு விரைவில் கரூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தி லட்சம் பேரை தி.மு.க-வில் சேர்ப்பேன்’ என்று சொல்லியிருந்தார். அதைத் தொடர்ந்துதான், கடந்த டிசம்பர் 27-ம் தேதி கரூருக்கு ஸ்டாலினை அழைத்துவந்து பிரமாண்டமான மாநாடுபோல, மாற்று கட்சியினரை தி.மு.க-வில் இணைக்கும் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதேநாளில், செந்தில்பாலாஜிக்கு போட்டியாக அவரின் அரசியல் எதிரியான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் ம.தி.மு.க-விலிருந்து 12 நிர்வாகிகள் உட்பட மாற்றுக்கட்சியினர் 1,200 பேரை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான விழாவில் அ.தி.மு.க-வில் இணைய வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick