பி.ஜே.பி-யின் பி டீம் சந்திரசேகர ராவ்? - மூன்றாம் அணி முயற்சியின் பின்னணி...

- சக்திவேல்

பி.ஜே.பி., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி என்ற செய்திகள் வந்தாலே, அதை அரசியல்வாதிகளும் சரி, வாக்காளர்களும் சரி அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. இப்போது மூன்றாம் அணி கனவுடன் களமிறங்கியிருக்கிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். அவர் பி.ஜே.பி-யின் ‘பி டீம்’ ஆகவே இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சந்திரசேகர் ராவின் மூன்றாம் அணி முயற்சியின்மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம், இது ஓட்டுகளைப் பிரிப்பதற்கான பி.ஜே.பி-யின் ‘பி டீம்’ என்பதே. அமித் ஷாவின் அம்பு அவர்’என்றும் ராவ் மீது சந்தேகம் கிளப்புகிறார்கள். எனவேதான், “தேசியக் கட்சிகளின் குடுமி மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது” என்ற ராவின் வார்த்தைகளுக்கு, பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களிடமே வரவேற்பு இல்லை. இதை, “ராவ் மூலமாக ராகுலுக்கு பி.ஜே.பி செக் வைக்கிறது. எதிர்க் கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, மோடியை மீண்டும் அரியணை அமர்த்தவே ராவ் முயற்சி செய்கிறார்” என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick