“ஸ்டெர்லைட் தரப்பிடம் பணம் பெற்றாரா சீமான்?”

குற்றம்சாட்டும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ள விவகாரம் பற்றியெரிகிறது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பிடமிருந்து சீமான் தரப்புக்குப் பணம் தரப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு அவர் விரிவான கடிதம் எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றக் கோரி சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் நீதிக் கொற்றம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் ‘நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அ.வியனரசு. அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், சீமான் புறக்கணிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்தான், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி ஒன்பது பக்கங்கள் கொண்ட கடிதத்தை சீமானுக்கு வியனரசு அனுப்பியுள்ள விவரம் தெரியவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick