மன்னிப்புக் கேட்டார் சக்தி... வருத்தம் தெரிவித்தார் கவுசல்யா! | Udumalai Kausalya Remarried Controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மன்னிப்புக் கேட்டார் சக்தி... வருத்தம் தெரிவித்தார் கவுசல்யா!

பைசல் செய்யப்பட்டதா கல்யாண சர்ச்சை?

சாதி ஆணவத்தால் உடுமலை சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பிறகு, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த சங்கரின் மனைவி கவுசல்யா, கடந்த டிசம்பர் 9-ம் தேதி, ‘நிமிர்வு கலையகம் பறை இசைக்குழு’வின் ஒருங்கிணைப்பாளரான சக்தியை மறுமணம் செய்துகொண்டார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், எவிடன்ஸ் கதிர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் முன்னின்று இந்தத் திருமணத்தை நடத்திவைத்தார்கள். திருமணம் முடிந்த சில மணி நேரத்தில், ‘இவர் ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார்’ என்று சக்தி மீதும், ‘அந்த உண்மைகள் தெரிந்தும் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சக்தியைத் திருமணம் செய்துகொள்கிறார்’ என்று கவுசல்யா மீதும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து 19.12.2018 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் எழுதியிருந்தோம். அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கவுசல்யா-சக்தி ஆகியோரிடமும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர்-விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகிய இருவரும் விசாரணை நடத்தி, அதன் முடிவாகக் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கைதான் இப்போது அதிர வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick