விவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி!

அதிபர்கள் கடனுக்கு அப்பாவிகள் கையெழுத்து

ஞ்சை மாவட்டம் ஆதனூரைச் சேர்ந்த கரும்பு விவசாயி மோகன்தாஸுக்கு, பாபநாசம் ஸ்டேட் வங்கியிலிருந்து ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதில், ‘எங்கள் வங்கியில் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறீர்கள். அதில், 2,58,918 ரூபாயை உடனே கட்ட வேண்டும்’ என்று அந்த நோட்டீஸில் இருந்தது. அதைக் கண்டவருக்கு பேரதிர்ச்சி. காரணம், அந்த வங்கிக்கிளைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையாம். 

இப்படி மோகன்தாஸுக்கு மட்டுமல்ல... அந்தப் பகுதியின் கரும்பு விவசாயிகள் பலரையும் அலறவைத்திருக்கின்றன இதுபோன்ற வக்கீல் நோட்டீஸ்கள். இது குறித்து விசாரித்தபோதுதான், ‘தனியார் சர்க்கரை ஆலை ஒன்று விவசாயிகளின் பெயர்களில் ரூ.300 கோடி ரூபாயை முறைகேடாக வங்கியில் கடன் வாங்கியிருக்கிறது. அதற்காகதான் வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது’ என்கிற விவரம் விவசாயிகளுக்குத் தெரியவந்தது. இதனால் கடும் கொதிப்பில் இருக்கிறார்கள் கரும்பு விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick