கஜா நிவாரணத்தில் கமிஷன் கேட்கும் அதிகாரிகள்!

தார்பாலின் ஷீட் கொள்முதல் முறைகேடு....

பொதுமக்களின் துயரத்திலும் காசு பார்ப்பது சில அரசு அதிகாரிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. கஜா நிவாரணப் பொருள்கள் பேக்கிங்கில் நடந்த முறைகேட்டை ஜூ.வி-யில் ஏற்கெனவே அம்பலப்படுத்தினோம். இந்த நிலையில்தான், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய தார்பாலின் ஷீட்கள் கொள்முதலிலும் அரசு அதிகாரிகளின் கமிஷன் பேரம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

கஜா புயலால் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு அரசு சார்பில் தற்காலிக நிவாரணமாக தார்பாலின் ஷீட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 23-ம் தேதி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘தார்பாலின்ஸ் இந்தியா தார்ப் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் சென்னை கிளையில் இருந்து தார்பாலின் ஷீட்கள் வாங்கப்பட்டன. அங்குதான் அரசு அதிகாரிகள் கமிஷன் பேசியிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick