“எஃப்.ஐ.ஆர் போடாத காவல்நிலையத்துக்கு விருதா?” | Periyakulam Police Station got India's Top 10 award - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/01/2019)

“எஃப்.ஐ.ஆர் போடாத காவல்நிலையத்துக்கு விருதா?”

சர்ச்சையில் பெரியகுளம் காவல்நிலையம்

ந்திய அளவில் சிறப்பாகச் செயல்படும் ‘டாப் - 10’ காவல்நிலையங்கள் பட்டியலில் இடம்பிடித்த பெரியகுளம் வடகரை காவல்நிலையம் மீது இப்போது குற்றப்பட்டியல் வாசிக்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், குற்றங்களைக் கண்டறிதல், விபத்துகளைக் குறைத்தல், காவல் நிலையத்தில் பொதுமக்களை அணுகும் முறை, காவல்துறையின் சமூகப் பணிகள், குற்றப்பதிவேடுகளைக் கணினியில் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, தேசிய அளவில் 10 காவல் நிலையங்களைத் தேர்வுசெய்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய உள்துறை அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்படும் டாப் - 10 பட்டியலில் பெரியகுளம் காவல்நிலையம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த விசாரணையில் இறங்கினோம். 

பெரியகுளத்தில் வடகரை, தென்கரை என இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. சமீபத்தில், வாட்ஸ்அப் ஆடியோவால் தேனி மாவட்ட போலீஸாரை அலறவைத்த புல்லட் நாகராஜ் என்ற ரவுடியை அதிரடியாகக் கைது செய்து பெயரெடுத்தது தென்கரை காவல்நிலையம். அதனால், டாப் - 10 பட்டியலில் தென்கரை காவல்நிலையம் இடம்பிடிக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், டாப் - 10 பட்டியலில் இடம்பிடித்தது வடகரை காவல்நிலையம்.