மோடி அரசு வட்டமிடும் மூன்றரை லட்சம் கோடி! - தொடரும் ரிசர்வ் வங்கி நெருக்கடி

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை உர்ஜித் படேல் ராஜினாமா செய்துவிட்ட பிறகு, ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமான மோதல் முடிவுக்கு வந்துவிட்டதுபோலத் தெரிகிறது. ஆனால், அந்த மோதலுக்கான பிரச்னை தீர்ந்ததா என்றால், நிச்சயமாக இல்லை. 

இந்திய ரிசர்வ் வங்கியில், ‘பாதுகாப்புக்கான மூலதனம்’ (Capital Reserve) ரூ.9.6 லட்சம் கோடி இருக்கிறது. அதன் மீது நீண்டகாலமாகக் கண் வைத்துள்ள மத்திய பி.ஜே.பி அரசு, அதிலிருந்து ரூ.3.6 லட்சம் கோடியைத் தமக்குக் கொடுக்குமாறு வலியுறுத்திவருகிறது. ஆனால், உண்டியலில் இருந்து எடுத்துக்கொடுப்பதைப்போல, அப்படியெல்லாம் கொடுத்துவிட முடியாது என்பது ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு. மத்திய அரசும் விடுவதாக இல்லை. அது, ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தது. இந்த நிலையில், மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்குமான வேறு சில விவகாரங்களில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார், ரகுராம் ராஜன். அந்த இடத்தில், உர்ஜித் படேலை உட்கார வைத்தது மோடி அரசு. இவருக்கும் அதே நெருக்கடி. இவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது, அந்த இடத்துக்கு சக்தி கந்த தாஸ் கொண்டுவரப்பட்டுள்ளார். பி.ஜே.பி அரசின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப இயங்கக்கூடியவர் என்று சொல்லப்படும் சக்தி காந்த தாஸ், மத்திய வருவாய்த் துறை செயலாளராக இருந்தபோதுதான், பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick