கழுகார் பதில்கள்!

@இரா.கணேசன், பாலக்கோடு.
ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா, தற்போது திருமணம் செய்துகொண்டிருக்கும் சக்தி மீதான பாலியல் மற்றும் பெண்களை ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக, பகுத்தறிவு இயக்கத்தினர் அபராதமெல்லாம் விதித்திருப்பது பற்றி..?


‘கறுப்புச்சட்டை கட்டப் பஞ்சாயத்து’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கவுசல்யா பாதிக்கப்பட்டபோது கொடுக்கப்பட்ட ஆதரவு, அடைக்கலம் நூற்றுக்கு நூறு சரி. தற்போது அவர் செய்திருக்கும் திருமணமும் சராசரி மனித உணர்வுகளுக்கு உட்பட்டது என்கிற வகையில் சரியே. இவையெல்லாம் தனி மனுஷியாக கவுசல்யாவின் உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால், சங்கரின் கொலைக்குப் பிறகு, அவர் பேசிய பேச்சுகளும் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிகளும்தான் தற்போது அவரது நடவடிக்கைகளை இடித்துப் பார்க்கின்றன. சக்தி மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என கவுசல்யா தாங்கிப்பிடிப்பது, முரணாக உள்ளது. ‘கவுசல்யாவுக்கு இன்னும்கூடப் பாதுகாப்புத் தேவை’ என்ற ரீதியில் அவரை ஆதரிப்பது முக்கியம்தான். ஆனால், அவர் செய்யும் அனைத்தையும் தாங்கிப்பிடிப்பது, அபராதம் விதிப்பது, ஒதுக்கி வைப்பது என்பது எல்லாம் தான் கேள்விகளை எழுப்புகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் ஆணவக் கொலைகளை ஆதரிக்கும் கொலைப் பாதகர்களையும், சாதிகளை உயர்த்திப்பிடிக்கும் ஆதிக்கவாதிகளையுமே ஊக்கம் பெற செய்யும் என்று தோன்றுகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick