சசிகலாவை நெருங்குகிறாரா திவாகரன்?

.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு வேலைகள் வேகமெடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் தினகரன் ஒத்துழைக்கவில்லையென்றால், அவரைத் தவிர்க்கவும் சசிகலா தரப்பு முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. இதுதொடர்பாக 06.01.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழின் மிஸ்டர் கழுகு பகுதியில், ‘அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க இணைப்பில் பி.ஜே.பி-யை விரும்பாத ஒரே நபர் தினகரன் மட்டுமே. தினகரன் தரப்பை சசிகலா தரப்பு எந்நேரமும் கழற்றிவிடலாம் என்று அரசியல் ஆருடம் சொல்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில், இதுகுறித்து விரிவாகப் பேசினார்கள் திவாகரன் ஆதரவாளர்கள்.

“புத்தாண்டுக்கு முந்தைய தினமே பி.ஜே.பி தரப்புடன் இணைப்பு விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக திவாகரன் டெல்லிக்குச் சென்றுவிட்டார். திவாகரனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்பில் இருந்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick