உயிருடன் இருக்கிறார்களா சுரங்கத் தொழிலாளர்கள்? | Rescue operations for 15 miners in Meghalaya - Junior Vikatan | ஜூனியர் விகடன்

உயிருடன் இருக்கிறார்களா சுரங்கத் தொழிலாளர்கள்?

தாய்லாந்துக்கு துடித்தோம்... மேகாலயாவை மறந்தோம்!

சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து மலைக்குகையில் சிக்கிய 13 பேரை மீட்பு படையினர் உயிரைப் பணயம் வைத்து மீட்ட காட்சிகளைக் கண்டு உலகமே சிலிர்த்தது. ஆனால், மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் ஒன்றில் 15 தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கி, 23 நாள்கள் ஆகிவிட்டன. ஒருவர்கூட மீட்கப்படவில்லை. கனத்த மெளனம் காக்கிறோம். சுரங்கத்தில் முழுமையாக வெள்ளம் சூழ்ந்த நிலையில், இனி அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்திருக்கிறது அரசு. ஆனால், இதுவரை நமது மீட்புப் படைகளால் அவர்கள் சிக்கிய இடத்தைக்கூட நெருங்க முடியவில்லை. இந்த சம்பவம் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியம் மற்றும் இயலாமையையும் இந்தியத் தொழில்நுட்பங்களின் போதாமைகளையும் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது!

மேகாலயா மாநிலத்தின் லும்தாரா கிராமத்தில் இருக்கும் அந்தச் சுரங்கத்தில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி காலை 8 மணிக்கு 22 தொழிலாளர்கள் நுழைந்தனர். அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் அங்கே பெருமழை பெய்தது. வெள்ளம் சூழ்வதற்கான ஆபத்து இருந்தும் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். அன்று மாலை அருகே ஓடும் லிட்டான் ஆற்றிலிருந்து சுரங்கத்துக்குள் வெள்ளம் பாயத் தொடங்கியது. காட்டாறாகப் பாய்ந்த வெள்ளத்தைப் பார்த்துப் பதறிய, சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த ஏழு தொழிலாளர்கள் எப்படியோ நீந்தி வெளியே வந்துவிட்டார்கள். ஆனால், உள் பகுதியில் இருந்த 15 பேர் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் அனைவருமே தினக்கூலிகள். நிலக்கரி சுரங்கமும் அனுமதி வாங்காமல் செயல்படும் சட்டவிரோதச் சுரங்கம் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick