வரலாற்றைப் புரட்டிய வனிதா மதில்! | Women's Vanitha Mathil Protest in Kerala - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வரலாற்றைப் புரட்டிய வனிதா மதில்!

சரண கோஷ போராட்டத்துக்கு பதிலடி கொடுத்த பெண்கள் சக்தி...

ரலாற்றைப் புரட்டிப்போட்டிருக்கிறது ‘வனிதா மதில்’ போராட்டம். கேரள வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவுப் பெண்கள் ஒன்றுதிரண்டது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும். பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளின் சரண கோஷப் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு நடந்தேறியிருக்கிறது, லட்சக்கணக்கான பெண்கள் 620 கி.மீ நீளத்துக்கு அணிவகுத்த ‘வனிதா மதில்’ போராட்டம்!

சபரிமலை விவகாரத்தில் பி.ஜே.பி மற்றும் சங் பரிவார் அமைப்பினரின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக் கட்சிகள் எதிர்க் கருத்துகளை மட்டுமே தெரிவித்து வந்தன. இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கட்சியும் பெண்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமான நடத்தியுள்ளன.

‘அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று வழிபடலாம்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதிலிருந்து சரணகோஷப் போராட்டம், ரத யாத்திரை, தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் எனத்  தொடர் போராட்டங்களை பி.ஜே.பி நடத்திவருகிறது. காங்கிரஸ் கட்சியும், ‘பக்தர்களுடன் நாங்களும் நிற்கிறோம்’ எனப் போராட்டங்களை நடத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick