பாலில் பாய்சன்? - விசாரணை நடத்திய ஜெயலலிதா! | An detective agent says there was an attempt murder on jayalalitha in 2010 - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பாலில் பாய்சன்? - விசாரணை நடத்திய ஜெயலலிதா!

து 2010-ம் ஆண்டு. போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு. இரவு நேரம். முதல் மாடியில் இருக்கும் தனது படுக்கை அறை நோக்கி நடந்தார் ஜெயலலிதா. அங்கு இருந்த டேபிளில் கண்ணாடி டம்ளரில் பால் இருந்தது. அந்த டம்ளரைக் கையில் எடுத்து முகத்தருகே கொண்டுபோனார். ஏதோ ஒரு நெடி வீசவே... அதிர்ந்து போனவர், அப்படியே டம்ளரை டேபிளில் வைத்துவிட்டார். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மூட்டுவலி தைலத்தின் நெடி அது. அவசரமாகத் தைலப் பாட்டிலைச் சோதித்தார். அந்தக் கண்ணாடி பாட்டிலை யாரோ திறந்திருப்பதை உணர்ந்தார் ஜெயலலிதா. அந்த அறையின் பணியாளர்கள் நான்கு பேர் மட்டுமே. அவர்களிடம் விசாரணை நடந்தது. எதுவும் புலப்படவில்லை. அப்போதுதான், விரல் ரேகை கண்டுபிடிப்பதில் நிபுணரான வரதராஜனை உடனே கிளம்பிவரும்படி அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. இப்படி ஒரு தகவல் கிடைக்கவே வரதராஜனைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick