மஞ்சுவிரட்டுக்கு நாள் குறித்த அரசு... தமிழர்களின் மரபுக்குப் புறம்பானதா? | TN Govt release GO about Jallikkattu dates - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மஞ்சுவிரட்டுக்கு நாள் குறித்த அரசு... தமிழர்களின் மரபுக்குப் புறம்பானதா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், இது பல ஆயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுக்குப் புறம்பானது எனச் சர்ச்சை கிளம்பியுள்ளது. கோயில் கட்டடக் கலைஞரான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் என்பவர், ‘மஞ்சுவிரட்டுக்கு தமிழக அரசு நாள் குறித்து அரசாணை வெளியிடுவது புது வழக்கமாக உள்ளது. தவறான பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மஞ்சுவிரட்டுக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது’ என்று சர்ச்சைக் கிளப்பி இருக்கிறார். 

தென்னன் மெய்ம்மனிடம் பேசினோம். “தமிழ் இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையே இல்லை. மஞ்சுவிரட்டு என்ற வார்த்தைதான் உபயோகிக்கப்பட்டுள்ளது. வளர்பிறை நான்காம் நாள் மஞ்சுவிரட்டு தொடங்கப்பட்டு, அடுத்த 12 நாள்களுக்கு மஞ்சுவிரட்டு நடத்துவது என்பதுச் சங்க இலக்கிய காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ள மரபு. கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. தவிர, இது ஆட்சிப் பீடத்திலிருப்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு அல்ல. ஊர் சபை ஒன்றுகூடித்தான் முடிவெடுக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick