3 கிலோ கடத்தல் தங்கமும்... முழிபிதுங்கிய மூணு போலீஸும்! | Gold Smuggling in Kodikkarai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

3 கிலோ கடத்தல் தங்கமும்... முழிபிதுங்கிய மூணு போலீஸும்!

நாகையில் வெளிப்பட்ட கடத்தல் குட்டு!

நாகை மாவட்டத்தில், வாகனச் சோதனையில் கிடைத்த கடத்தல் தங்கக்கட்டிகள், பின்னர் மரத்தடியில் மீட்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், தங்கத்தைப் பங்கிட்டுக்கொள்ள முயற்சி செய்த மூன்று போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், போலீஸார் மற்றும் கடத்தல்காரர்களின் கூட்டணியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

நாகை மாவட்டம், கோடியக்கரை கடற்கரையிலிருந்து, படகு மூலம் குறுகிய நேரத்தில் இலங்கைக்குச் சென்றுவிடமுடியும். இதனால், இரவு நேரத்தில் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகள், கஞ்சா, ஹெராயின் போன்றவை இந்தியாவுக்கும், கோடியக்கரையிலிருந்து டீசல், பெட்ரோல், உயிர்க் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை இலங்கைக்கும் கடத்துகிறார்கள். கடத்தல் பொருள் பரிமாற்றங்கள் பெரும்பாலும் நடுக்கடலிலேயே நடக்கும். கோடியக்கரையில் இருந்த கடற்படை முகாம் கடந்த ஆண்டு அகற்றப்பட்டதும், சோதனைச் சாவடிகள் செயலிழந்து கிடப்பதும், கடத்தல்காரர்களுக்கு வசதியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick