ஐ.ஏ.எஸ் போர்க்கொடி... அரசுக்கு நெருக்கடி! - பின்னணியில் பி.ஜே.பி | IAS Officers Vs TN Ministers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐ.ஏ.எஸ் போர்க்கொடி... அரசுக்கு நெருக்கடி! - பின்னணியில் பி.ஜே.பி

மிழகக் கோட்டை நிலவரம் கொதிநிலையில் தகிக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன்மீது தமிழக அமைச்சர்கள் இருவர் முன்வைத்த கடுமையான கருத்துகள் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குப் பதிலடியாக, ‘முதலமைச்சர், அமைச்சர்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்’ என்கிற ரீதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதுடன், அதை அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது. அமைச்சர்களின் கடுமையான பேச்சுகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பதிலடிகளும் தமிழகம் இதுவரை பார்த்திராத நிகழ்வுகள்... இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசியலில் பல்வேறு பூகம்பங்கள் வெடிக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்காதது தொடர்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பதிலில் சந்தேகம் இருப்பதால், அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்’’ என்று கொளுத்திப்போட்டார். தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சிலரைக் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மை வெளிவரும். போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டும்” என்று பாய்ந்தார். இந்தப் பேச்சுக்கள்தான் ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த  2-ம் தேதி அவசரமாகக் கூடிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்க நிர்வாகக்குழு, அமைச்சர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அறிக்கையும் வெளியிட்டது. 

Editor’s Pick