தவறு அமைச்சர்கள் மீதுதான்! - கொதிக்கும் கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். | Balachandhiran IAS interview about IAS officers Vs Ministers issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

தவறு அமைச்சர்கள் மீதுதான்! - கொதிக்கும் கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.

மைச்சர்களுக்கு எதிராக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொதித்துள்ள விவகாரம் குறித்து மேற்குவங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளரான கோ.பாலச்சந்திரனிடம் பேசினோம். 

“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், `பணியில் இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. துறைச் செயலாளர் ஒருவர், தன் துறையின் செயல்பாடுகளைப் பற்றி ஊடகங்களில் பேசலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் அந்த அதிகாரி மீது யாராவதுக் குற்றச்சாட்டு சுமத்தினால், அரசின் அனுமதியில்லாமல் அவர் ஊடகங்களில் பேச முடியாது. அப்படிப் பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளவரைப் பற்றி, அமைச்சர்கள் பொது வெளியில் பேசுவது முறைகேடானது; மரபை மீறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவர்களுக்கு ஞானோதயம் வந்திருக்கிறதா? எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளித்தபோது என்ன நடந்தது என்பதைப் பற்றி 2016-ம் ஆண்டு பழனி ஜி.பெரியசாமி ‘இதய ஒலி’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். அதில், `தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் உடல்நலனுக்குப் போதுமானதாக இல்லை என மருத்துவ அதிகாரிகள் கூறிய பிறகுதான், வெளிநாட்டுக்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட சூழல் ஜெயலலிதாவுக்கு இருந்ததா என்பதைப் பற்றிப் பொதுமக்களுக்கு எதுவும் தெரியாது. இதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய இடமாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick